அனைவருக்கும் வீடு கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
அனைவருக்கும் வீடு கேட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் எச்எம்கேபி அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைவருக்கும் வீடு கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் இந்திய தொழிலாளர் விவசாயிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஒரு சதவீத ஏழைகளுக்கு கூட பயனளிக்காமல் இருக்கும் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு ஆய்வு செய்து அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை அறிவித்திருக்க வேண்டும், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் படி சொந்த நிலம் இல்லாத ஏழை எளிய தமிழகத்தின் 40 லட்சம் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனையுடன் வீடு கட்ட மானியத்துடன் வங்கி கடன் வழங்க வேண்டும், தமிழகத்தில் 100 தனிச்சிறப்பு தாசில்தார்களை நியமித்து கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நகர் என்ற பெயரில் 40 லட்சம் குடும்பங்களுக்கும் இலவச வீட்டு மனை வழங்கி மத்திய மாநில அரசுகளின் மானியத்துடன் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு (எச் எம் கே பி) சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளராக ராபர்ட் கிறிஸ்டி தலைமை தாங்கினார். இதில் எச்.எம். கே.பி. மாநில தலைவர் சரவணன், கட்டுமான சங்க தலைவர் ராமச்சந்திரன், பாரிஸ் சுரேஷ் லட்சுமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன .
இதே கோரிக்கையை வலியுறுத்தி சங்கத்தின் மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.