மணப்பாறையில் ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை
மணப்பாறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார் அறிவித்துள்ளார்.;
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பகுமார் முன்னாள் எம்பி வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் 25/7/2022 திங்கட்கிழமை காலை 9.30 மணி அளவில் மணப்பாறை பெரியார் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அது சமயம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி கழக மற்றும் கிளைக் கழக, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள கழக செயல்வீரர், வீராங்கனைகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.