மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை
மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் அரசு நல சலுகைகள் வழங்கிட வேண்டும் என்று அனைத்து கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் ராபர்ட் கிறிஸ்டி பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அனைத்து கிறிஸ்தவ முன்னேற்ற கழகத்தின் தலைவர் ராபர்ட் கிறிஸ்டி, பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
2000 ஆண்டுகளாய் பூர்வீக கிறிஸ்தவர்களான தலித் கிறிஸ்தவர்களை சுதந்திரம் பெற்றது முதல் 75 ஆண்டு காலமாக கிறிஸ்தவ தலித் களின் 85 செய்த மக்கள் ஐந்தாம் தலைமுறை யாக இன்று வரை வறுமையை மட்டுமே சந்தித்து வருகிறார்கள்.
பாரதத்தின் 1.5 சதவீத தலித் கிறிஸ்தவர்களை மீதமுள்ள 1.5% பிற்படுத்தப்பட்டோரின் பூர்வீக இந்து மதத்தினை சார்ந்த சாதித்தன்மையுடன் சார்ந்த கிறிஸ்தவர்கள் என்பதை அரசு உணர்ந்திட வேண்டும்.
கிறிஸ்துவத்தின் தீண்டாமையும், தனி கல்லறையும், அவர்கள் வாழ்வாதாரம் இன்றி இருப்பதை அரசு உணர்ந்து விட்டு தலித் கிறிஸ்தவர்களை இந்து தலித்துகளை போன்று கிறிஸ்தவ கிறிஸ்தவர்களையும் எஸ்சி பட்டியலில் சேர்த்திட வேண்டும். சிறுபான்மை நல பிரிவின் ஆணையம் என்பது ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களுக்கு அரசின் திட்டங்களை பெற முடியாத நிலையில் இருப்பதை மத்திய அரசு உணர்ந்த இந்திய கிறிஸ்தவ மக்களை கணக்கெடுப்பு செய்து விகிதாச்சார அடிப்படையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அரசு நலத்திட்டங்கள் கிடைத்திட வழி செய்திட வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளது.