தீபாவளி திருடர்களை கண்காணிக்க ரகசிய கேமரா: திருச்சி கமிஷனர் பேட்டி

திருச்சியில் தீபாவளி திருடர்களை கண்காணிக்க ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் பேட்டி அளித்தார்.

Update: 2021-10-22 09:56 GMT

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பேட்டி அளித்தார்.

திருச்சி மாநகர  போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி  சத்திரம் மற்றும் மத்திய பஸ் நிலையங்களில் பொதுஅறிவிப்பு மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு போலீசார் மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து எவ்வித குற்றச் சம்பவம் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கோபுரங்கள்குற்ற நடத்தை உடையவர்களை கண்காணிக்க 6 கண்காணிப்பு கோபுரங்கள்.என்.எஸ்.பி. ரோடு, பெரியகடைவீதி சந்திப்பு (மலைவாசல் அருகில்), சிங்காரதோப்பு பூம்புகார்அருகில், பெரியகடை வீதி கரீம் ஸ்டோர் அருகில், மெயின்கார்டுகேட், தெப்பக்குளம் ரகுநாத்ஜங்சன் அருகில், பெரியகடை வீதி சந்துக்கடை ஆகிய 6 இடங்களில் நிறுவப்பட்டு பைனாகுலா்மூலம் கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விரைவு சுழல் கேமராக்கள் மற்றும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் குற்ற நடத்தைகாரர்களை கண்காணிக்க தெப்பக்குளம் என்.எஸ்.பி. ரோடு சந்திப்பில் ஒரு டூம் கேமராவும், சின்னகடைவீதி, சத்திரம் பஸ் நிலையம், பெரியகடைவீதி, நந்திகோயில் தெரு.ஆகிய பகுதிகளில் 23 சி.சி.டி.வி. கேமராக்களும், மெயின்கார்டுகேட், சிங்காரத்தோப்பு, சூப்பர் பஜார்,மதுரை ரோடு, மேலபுலிவார்டுரோடு முதல் ஜாபர்ஷா தெரு ஆகிய பகுதிகளில் 20 கேமராக்களும், சத்திரம்பஸ் நிலையம், அண்ணா சிலை பகுதிகளில் 84 கேமராக்களும், ஆக மொத்தம் 127 சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற நடத்தைகாரர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சத்திரம் பஸ் நிலையம்,என்.எஸ்.பி. ரோடு ரகுநாத் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் மானிட்டர்கள் அமைக்கப்பட்டு அதைஇயக்குவதற்கு தனித்தனியே போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும்கடைவீதிகளில் உள்ள நிறுவனங்களின் வாயில்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களும்,சாலையை நோக்கி திருப்பி வைக்கப்பட்டு அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் திருச்சி மாநகரில்மைக்கப்பட்டுள்ள நவீன கட்டுப்பாட்டு அறை மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நந்தி கோவில் சந்திப்பு,சின்னகடை வீதி பாபு ரோடு சந்திப்பு,பெரிய கடை வீதி தைலா சில்க்ஸ், கிலேதார் ரோடு சந்திப்பு,சிங்காரத் தோப்பு பூம்புகார் எதிர்புறம் ஆகிய4 இடங்களில் வாகன சோதனை மையங்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், குற்றத்தடுப்புக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டறியும் காவலர்கள் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெடிகுண்டு சோதனை முழு அளவில் செய்வதற்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது. மத்திய பஸ் நிலையம், ரயில்வே ஜங்சன் மற்றும் பிற முக்கியபகுதிகளிலும் வெடிகுண்டு கண்டறியும் போலீசார் கொண்ட குழுக்கள் தனியாகவெடிகுண்டு கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குற்ற நடத்தையை கண்காணிக்கவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கைஎடுக்கவும் 100 குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.பாதுகாப்பு அலுவலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்புக்காக கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம்மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு பணிக்காக திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர்தலைமையில் 2 உதவி ஆணையர்கள், 7 காவல் ஆய்வாளர்கள், 60 சார்புஆய்வாளர்கள், 262 போலீசார், 100 ஆயுதப்படை போலீசார், 60 தமிழ்நாடு சிறப்புக்காவல் படை போலீசார், 100 ஊர்க்காவல் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை மற்றும்காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்குற்றத்தடுப்பு பணிக்காக திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில், 1 உதவி ஆணையர், 3 காவல் ஆய்வாளர்கள், 10 சார்பு ஆய்வாளர்கள்,50 போலீசார், 25 ஊர்காவல் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டைமற்றும் காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் 1 உதவி ஆணையர், 2காவல் ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள், 60 காவல் போலீசார், 20 ஊர்காவல் படையினரும்நியமிக்கப்பட்டுள்ளனர்.

இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தெப்பக்குளம்அஞ்சல் அலுவலகம் பின்புறமுள்ள பனானா லீப் அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமானமைதானம், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி மைதானம் மற்றும் கோட்டை ரயில்வேஸ்டேஷன் ரோடு பார்க்கிங் மைதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு சிங்காரத்தோப்பு, சூப்பர் பஜார் மற்றும் யானைகுளம் மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு மேலபுலிவார்டு ரோடு கெயிட்டி திரையரங்கம்உட்புறமுள்ள கார் நிறுத்துமிடம் மற்றும் பழைய குட்செட் ரோடு (சோபிஸ் கார்னர்) இறுதியில் உள்ள ரயில்வே மைதானம் ஆகிய இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் பொதுமக்கள்தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநகர போலீஸ் துணை ஆணையர் (வடக்கு) சக்திவேல், போலீஸ் துணை ஆணையர் (தெற்கு)முத்தரசு ஆகியோர் உள்பட அதிகாரிகள் அப்போது உடன் இருந்தனர்.

Tags:    

Similar News