விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற முன்னாள் கவுன்சிலர் மகன் சாவு
திருச்சியில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற முன்னாள் கவுன்சிலர் மகன் உயிரிழந்தார்.;
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராகிம் பிச்சை. முன்னாள் கவுன்சிலரான இவரது மகன் ஆசிக் (வயது 19).
இவர் கடந்த மாதம் திருச்சி கோர்ட்டு அருகே தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டில் இருந்த மணலில் திடீரென சறுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் ஆசிக்கின் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து புகாரின் பேரில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.