திருமணத்திற்கு மகள் மறுப்பு; தாய் எலி பாஷனம் தின்று தற்கொலைக்கு முயற்சி

நிச்சயித்த திருமணத்திற்கு மகள் மறுப்பு தெரிவித்ததால் தாய் எலி பாஷனம் தின்று தற்கொலைக்கு முயன்றார்.;

Update: 2021-11-11 10:30 GMT
பைல் படம்

திருச்சி கிராப்பட்டி மின் நகரை சேர்ந்தவர் தங்கரசு. இவரின் மனைவி தங்கப்பொண்ணு (வயது 48). இவர்களுக்கு சாந்தி, சந்தியா என இரு மகள்கள் உள்ளனர்.

இதில் சாந்திக்கு இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், தான் வேறொருவரை காதலிப்பதாக கூறி சாந்தி கடைசி நேரத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவரது தாய் தங்கப்பொண்ணு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

தனது தாயை காணவில்லை என்று மற்றொரு மகள் சந்தியா (வயது 21) எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் தங்கப்பொண்ணை தேடி வந்த நிலையில்,

தங்கப்பொண்ணுவே வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இந்நிலையில் வீட்டில் எலி பாஷனம் தின்று தாய் தங்கப்பொண்ணு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News