தி.மு.க. வேட்பாளர் வெ. ராமதாஸ் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிப்பு

திருச்சி மாநகராட்சி தி.மு.க. வேட்பாளர் வெ. ராமதாஸ் துண்டு பிரசுரம் வழங்கி வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.;

Update: 2022-02-09 09:49 GMT
வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார் தி.மு.க. வேட்பாளர் வெ. ராமதாஸ்.

திருச்சி மாநகராட்சி 55வது வார்டு தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வெ. ராமதாஸ் இன்று காலை கருமண்டபம் வடக்கு தெரு பகுதியில் வீடு வீடாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரம் மற்றும்  தி.மு.க. அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு தோறும் வினியோகம் செய்து தனக்கு ஓட்டு போடும்படி கேட்டுக்கொண்டார்.


தி.மு.க. அரசின் சாதனைகள் உள்ளாட்சியிலும் தொடர உள்ளாட்சியில் நல்லாட்சி மலர்ந்திட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச்செய்யும்படி வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News