திருச்சி காந்தி மார்க்கெட் டீக்கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
திருச்சி காந்தி மார்க்கெட் டீக்கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன;
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கடையில் தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. டீக்கடையில் உள்ள சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ஒரு கடையில் பற்றி எரிந்த தீயானது பக்கத்தில் பூட்டப்பட்டிருந்தகடைகளுக்கும் மெல்ல மெல்ல பரவி 6 கடைகள் தீப்பிடித்து எரிந்தது.
தீயின் வெப்பம் தாளாது மேலும் ஒரு சிலிண்டர் வெடித்தது. அங்கு வந்த காந்தி மார்க்கெட் போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டடது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் இன்று காலை காந்திமார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.