திருச்சி மாநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது- போலீசார் நடவடிக்கை
திருச்சி மாநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்; அவர்களிடம் இருந்து, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
திருச்சி மாநகரில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து, திருச்சி தில்லை நகர், கண்டோன்மென்ட், மத்திய பஸ் நிலையம், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சோமரசம்பேட்டையை சேர்ந்த பார்த்திபன், உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த பிரகாஷ் குமார், அல்லி துறையைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் இருந்து, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள், ஐந்து இடங்களில் 5 பேரிடம் மிரட்டி செல்போன்களை பறித்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் வேறு எங்கேனும் கைவரிசை காட்டி உள்ளளார்களா என்பது குறித்தும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.