இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் படுகொலையை கண்டித்து திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.;

Update: 2021-11-12 10:15 GMT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் படுகொலையை கண்டித்தும், சமூக விரோதிகளை கைது செய்யக்கோரியும் இன்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஏஐடியுசி மாவட்ட பொது செயலாளர் க.சுரேஷ், மாணவர் பெருமன்றம் , இளைஞர் பெருமன்றம் , ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் , பகுதி செயலாளர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள்,  கட்சி கிளை செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News