திருச்சி உறையூர் பாளையம் பஜார் சாலையை சீரமைக்க கவுன்சிலர் கோரிக்கை

திருச்சி உறையூர் பாளையம் பஜார் சாலையை தற்காலிகமாக சீரமைக்க கவுன்சிலர் சுரேஷ்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2022-06-27 11:59 GMT

மேயரிடம் கோரிக்கை மனு அளித்தார் கவுன்சிலர் சுரேஷ்குமார்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது திருச்சி மாநகராட்சி 23-வது வார்டு கவுன்சிலர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) சுரேஷ்குமார் மேயரிட ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்.

அந்த மனுவில் திருச்சி மாநகராட்சி 23வது வார்டு உறையூர் பாளையம் பஜார் சாலை முக்கிய சாலைக்கு இணையான சாலையாக உள்ளது. இந்த சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதித்தல் மற்றும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் மிக தாமதமாக நடைபெறுவதால் மக்கள் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமம் அடைகிறார்கள். ஆகவே இந்த பாதையில் தற்காலிக சாலை அமைத்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News