மழை நீர் வடிகாலை முழுமையாக கட்டி முடிக்க மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை

மழை நீர் வடிகாலை முழுமையாக கட்டி முடிக்க திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஜாபர் அலி கோரிக்கை விடுத்து பேசினார்.

Update: 2023-10-31 16:59 GMT

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா முன்னிலை வைத்தனர்.

தீண்டாமை ஒழிப்பு  உறுதி மொழியை மேயர் அன்பழகன் வாசிக்க அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளும் அதனை திரும்ப படித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து திருக்குறள் வாசிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கூட்டத்தில் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கோரிக்கை மற்றும் தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.

கவுன்சிலர் முத்துச் செல்வம் மாநகராட்சி பகுதிகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால் அதனை எடுத்தவர்கள் சரியாக அந்த பணியை செய்யவில்லை. ஆதலால் அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து பேசினார். இதற்கு பதில் அளித்த மேயர் அன்பழகன் அந்த டெண்டர் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதனை தொடர்ந்து திருச்சி 61 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜாபர் அலி (தி.மு.க) திருச்சி மாநகராட்சி 61 வது வார்டில் ஜே. கே. நகரில் உள்ள மெயின் ரோட்டில் மழை நீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்றது. இந்த பணியானது பாதி தான் முடிந்துள்ளது. மீதி அப்படியே நிற்பதால் மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்து மக்கள் கடும் அவதி அடைகிறார்கள் மேலும் கொசு தொல்லையும் ஏற்படுகிறது .இதன் காரணமாக மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே மழை நீர் வடிகாலை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு டெண்டர் விடப்பட்டிருப்பதாக மேயர் பதிலளித்தார்.

இதே போல பல்வேறு மற்ற கவுன்சிலர்களும் தங்கள் வார்டில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.

Tags:    

Similar News