ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க திருச்சி கல்லூரி மாணவர்கள் உறுதி ஏற்பு
திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க உறுதி எடுத்துக்கொண்டனர்.;
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் குழுவின் சார்பாக "ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பற்றிய விழிப்புணர்வு வாரத்தை" முன்னிட்டு சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டு விழாவின் மாணவர்கள் பேராசிரியர்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கலைப் புலம் முதன்மையர் முனைவர் ஏ. சையத் ஜாகிர் ஹசன் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பற்றிய விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினார்.சமுக பணி பகுதி ஐந்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஷேக் இஸ்மாயில் உறுதி மொழி படிக்க, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு பாடுபடுவோம் என உறுதி மொழி எடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் ஏஅக்பர் ஹுசைன் மற்றும் பேராசிரியர்கள் , நுகர்வோர் மன்றத்தின் 112 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் ஆசிரிய ஆலோசகர் முனைவர் டி.உமர் சாதிக் ஒருங்கிணைத்து நடத்தினார்.