திருச்சியில் இன்று ஒரே நாளில் 453 பேர் கொரோனா பாதிப்பு: ஒருவர் பலி

திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வீடுகளில் இருந்து 3,150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-01-16 15:30 GMT

பைல் படம்.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் அவதிபட்டு வருகிறது. இதில் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையின் பாதிப்புகளும், இறப்பு விகிதமும் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பெரும் முயற்சியாலும் கொரோனா தடுப்பூசி மற்றும் முககவசம், சமூக இடைவெளி ஆகியவற்றின் மூலம் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. இதற்கிடையில் ஒமிக்ரான் நோய்தொற்று பரவி வருவதாக சுகாதாரதுறை தெரிவித்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அளவுக்கு அதிகமான மழை பெய்தது. தொடர்ந்து கடந்த ஒரு மாதகாலமாக பனியும் அதிகமாக பெய்து வருகிறது. இதற்கிடையே கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகள் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 453 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 271 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வீடுகளில் இருந்து 3,150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலி என்று அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News