திருச்சி: 15-வது சுற்று முகாமில் 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2021-12-19 08:02 GMT

திருச்சி மாவட்டத்தில் நேற்று 15-வது சுற்று சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. முகாமில் திருச்சி புறநகரில் 322 இடங்களில் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 200 இடங்கள் என மொத்தம் 522 இடங்களில் நடைபெற்றது. நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற முகாமில் மாவட்டம் முழுவதும் 66 ஆயிரத்து 880 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News