திருச்சி புறநகர் பகுதியில் 64 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
திருச்சி புறநகர் பகுதியில் 64 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
திருச்சி புறநகர் பகுதியில் உள்ள 64 ஆரம்ப சுகாதார நிலை யங்களில் இன்று (புதன்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதன்படி துறையூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நவல்பட்டு, வளநாடு ஆகிய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், புள்ளம்பாடி வட்டார சுகாதார நிலையம், கீழக்குறிச்சி, அரசங்குடி, திருநெடுங்குளம், இனாம் குளத்தூர், சோமரசம்பேட்டை, நாக மங்கலம், குழுமணி, அந்தநல்லூர், பெருகமணி, பெட்டவாய்த்தலை, புத்தாநத்தம், செட்டியப்பட்டி, மரவனூர், ஆனாம் பட்டி, கீரனூர், அணியாப்பூர், வையம்பட்டி, சுக்காம்பட்டி, கருமலை, செவல்பட்டி, ஆவிக்காலப்பட்டி, கல்லாமேடு, சிறுமயன்குடி, தச்சன்குறிச்சி, புதூர் உத்தமனூர், அன்பில், வாளாடி, பெருவளப்பூர், அலுந்தைலைப்பூர், கானகிளியநல்லுர், கல்லக்குடி, மேலரசூர், ஒரத்தூர், சிறுகாம்பூர், 94 கரியமாணிக்கம், இருங்களூர், சமயபுரம், எதுமலை, பெரகம்பி, வீரமச்சான்பட்டி, கண்ணனூர், பெருமாள்பாளையம், செங்காட்டுப்பட்டி, உப்பிலியபுரம், எரகுடி, பி.மேட்டூர், டாப்செங்காட்டுப்பட்டி, தண்டலைபுத்தூர், மூவனூர், புலிவலம், கோட்டாத்தூர், வெளியனூர், தா.பேட்டை, மேட்டுப்பாளையம், தும்பலம், காட்டுப்புத்தூர், மேய்க்கல்நாயக்கன்பட்டி, அப்பணநல்லூர், முருங்கை, காடுவெட்டி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதற்காக 25,750 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 600 டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 26,350 டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.