கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு திருச்சி மாநகராட்சி பரிசு
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சி சார்பில் 6-வது கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த முகாமில் தடுப்பூசி போட்ட பயனாளிகளுக்கு கோட்டம் வாரியாக முதல் பரிசாக 4 பேருக்கு பிரிட்ஜ்களும், இரண்டாம் பரிசாக 4 பேருக்கு வாஷிங் மிஷின்களும், மூன்றாம் பரிசாக 8 பேருக்கு வெட்கிரைண்டர்களும் மற்றும் ஆறுதல் பரிசுகளாக 40 பேருக்கு சைக்கிள்களும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் 23ஆம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்ட 27,632 நபர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 50 பேருக்கு மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் இந்த பரிசுகளை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.