திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் நேற்று கொரோனாவுக்கு 3 பேர் பலி

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2022-01-19 05:06 GMT

திருச்சி மாவட்டத்தில் புதிதாக நேற்று 471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 10 நபர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 நபர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 338 நபர்கள் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்களில் 43 பேரும் குணமடைந்தனர்.

திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 440 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 3-வது அலை தொடங்கிய பிறகு திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3 நபர்கள் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அரசின் அறிவுறுத்தலின் படி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News