திருச்சி மாவட்டத்தில் இன்று 10-வது கட்டமாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் இன்று 10-வது கட்டமாக 524 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.;

Update: 2021-11-21 05:49 GMT

திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதுவரை திருச்சி மாவட்டத்தில் 14 லட்சத்து 76 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 10-வது கட்டமாக கொரோனோ சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

 அதன்படி மாநகராட்சி பகுதிக்குட் பட்ட 65 வார்டு பகுதிகளில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் நடமாடும் மருத்துவ குழு சார்பில் 200 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இதேபோல் புறநகர் பகுதிகளுக்குட்பட்ட திருவெறும்பூர், மணிகண்டம், அந்தநல்லூர், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், துறையூர், உப்பிலியபுரம், முசிறி, தாத்தையங்கார்பேட்டை, தொட்டியம் ஆகிய வட்டார பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 324 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News