தொடர் மழை: பொது மக்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் சிவராசு அறிவிப்பு

தொடர் மழை - பொது மக்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் சிவராசு அறிவிப்பு.

Update: 2021-11-08 03:23 GMT

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்தில்  பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் 90 சதவீத்திற்கு மேல் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும் .தாழ்வான பகுதிகளிலும் , நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

மழை, வெள்ளம் நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது . வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் .பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் .

நீர்விழ்ச்சிகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

பேரிடர் காலங்களில்  மெழுகுவத்தி மற்றும் தீப்பெட்டி ஒரு வார காலத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ( உணவு வகைகள் ) எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் மருந்து மற்றும் பால் பவுடர் மின்விளக்குகள் மற்றும் உபரி பேட்டரிகள் சுகாதாரத்தை பேணிக் காக்க தேவையான பொருட்கள்  முகக் கவசங்கள் பொதுமக்கள் அனைவரும் கைவசம் வைத்திருக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News