வெள்ள பாதிப்பு மாவட்டங்களுக்கு மெக்கானிக் அனுப்புவது குறித்த ஆலோசனை கூட்டம்

வெள்ள பாதிப்பு மாவட்டங்களுக்கு மெக்கானிக்குகளை அனுப்புவது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

Update: 2023-12-28 15:29 GMT

வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு மெக்கானிக்குகளைஅனுப்பி வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பேய் மழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத இந்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்தன.

இப்படி பழுதடைந்த டூ வீலர்களை பழுது நீக்கம் செய்வதற்கு  தன்னார்வமுள்ள மெக்கானிக்குகளை அனுப்பி வைப்பது தொடர்பாக திருச்சி மாநகர காவல்  துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை  கூட்டம் நேற்று நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு திருச்சி மாநகர காவல் போக்குவரத்து துணை போக்குவரத்து ஆணையர் அழகரசு தலைமை வகித்தார். ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயன்படுத்த இயலாத டூவிலர்களை பயன்பாட்டிற்கு ஏதுவாக பழுது நீக்கம் செய்யும் பணியிணை மேற்கொள்ள தன்னார்வமுள்ள மெக்கானிக்குகளை திருச்சி சரக போக்குவரத்துத்துறை சார்பில் அனுப்பி வைப்பது தொடர்பாக மெக்கானிக்குகளிடம் விருப்பத்தை கேட்டு அனுப்புவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் (பிரேக் இன்ஸ்பெக்டர்) உட்பட டூவீலர் மெக்கானிக்குகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News