திருச்சி அருகே கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

திருச்சி அருகே கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-02-29 15:34 GMT

திருச்சி அருகே கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அகில இந்திய கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் மகாசமேளனம் இந்திய நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் மூலமாக  இந்திய பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை விண்ணப்பம் அனுப்பும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட குழு சார்பில் 29.2.2024 இன்று காலை 10.15 மணி அளவில் சோமரசம்பேட்டை தபால் நிலையம் அருகில் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் செல்வகுமார்  துவக்கி வைத்து உரையாற்றினார். இறுதியாக கட்டட சங்க மாநிலத் துணைத் தலைவரும், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் நிறைவுறை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, ஏஐடியுசி மாவட்ட தலைவர் வே. நடராஜா, பெண்கள் சங்க மாநில துணை ஒருங்கிணைப்பாளர் மருதாம்பாள் , மாவட்ட துணை செயலாளர்கள் வீராசாமி , சுமதி , மாவட்ட துணை தலைவர்கள்  துரைராஜ், இருதயசாமி ,முத்துலட்சுமி தேசியக் குழு உறுப்பினர் நிர்மலா , மாதர் சங்க ஒன்றிய செயலாளர் வித்யா , தரைக்கடை சங்க ஒன்றிய செயலாளர்  மேகராஜ்,  உள்ளாட்சி சங்க ஒன்றிய செயலாளர் நதியா, ஆட்டோ சங்க வாசன் சிட்டி தலைவர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்முத்துசாமி, பழனியப்பன், ரஜியாபேகம் ,சந்திரா சுரேஷ், கலைச்செல்வன், கணேசன், ஜெகதீஸ்வரன், பழனியம்மாள், விமலா, ஹேமலதா, சகுந்தலா, ஜான்சிராணி ,விஜயா, கதீர்வடிவேல், முத்துலட்சுமி, தனலெட்சுமி, ஆரோக்கியராணி, பூபதி விஸ்வநாதன், விஜயலட்சுமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் வழங்குவது போல் பொங்கல் அல்லது தீபாவளி போனஸ் ஆக ரூபாய் 5000 வழங்க வேண்டும், பெண்களுக்கு 50 வயதிலும் ஆண்களுக்கு 55 வயதிலும் ரூபாய் 6 ஆயிரம் ஒய்வூதியம் உயர்த்தி வழங்க கோரியும், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவை வாரியமே ஏற்க வேண்டும், கட்டுமான பொருட்களின் விலை 100% வரை உயர்ந்து உள்ளதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 10 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு ESI மருத்துவ காப்பீடு, EPF வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நல வாரியத்திற்கு தனி இணையதளம் உருவாக்கி சர்வர் தடையில்லாமல் செயல்பட தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்கிற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இறுதியாக மாவட்ட துணைத் தலைவர் முத்தழகு நன்றி கூறினார்.

Tags:    

Similar News