திருச்சியில் மாவட்ட தலைவரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் மாவட்ட தலைவரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமாக அருணாச்சலம் மன்றத்தில் கடந்த 17- 4 -22 அன்று மன்றத்தில் தியாகி கக்கன்ஜி படம் காங்கிரசாரால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அந்த படத்தை தூக்கி எறிந்து விட்டதாக கூறி அருணாசலம் மன்ற வாயிலில் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் எம். சரவணன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வக்கீல் சரவணன் தலைமை தாங்கினார்.
கக்கன் படத்தை தூக்கி எறிந்த மாவட்டத் தலைவர் ஜவஹர் மீது மாநில தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும், நாளை காலை 10மணிக்குள் கக்கன் படம் வைக்கப்படவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என சரவணன் ஆர்ப்பாட்டத்தின்போது கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் முரளி, கள்ளத்தெரு குமார், ஜி எம் ஜி மகேந்திரன், ஜீவா நகர் மாரிமுத்து, வார்டு தலைவர் பாலசுப்பிரம மணியன், முருகன், சிறுபான்மை பிரிவு பஜார் மொய்தீன் மன்சூர், கலைப்பிரிவு மாவட்ட தலைவர் ராகவேந்திரா, பிரியங்கா காந்தி, ஆனந்தி நாச்சிகுறிச்சி கவுன்சிலர் அருண் பிரசாத் எஸ்.சி எஸ்.டி மாவட்ட செயலாளர் வினோத்குமார், ஜான் கோப்பு தீ ரவி, ஏர்போர்ட் கௌதம், ஆட்டோ பாலு ரஹ்மான் பஜ்ஜி போட்டோ பாலா, மலைக்கோட்டை சிவா, ஆனந்து மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.