காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருச்சியில் காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-07-08 06:48 GMT

காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் பிறந்த நாள் விழா திருச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவரும், ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் எம். கே. விஷ்ணுபிரசாத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் தலைமையில் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் மலைக்கோட்டை முரளி, மாவட்ட பொது செயலாளர் கள்ளிக்குடி குமார், கள்ளத்தெரு குமார், வெல்லமண்டி பாலசுப்ரமணியன், சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், மலைக்கோட்டை பகுதி வெங்கடேஷ் காந்தி, ஜங்ஷன் பகுதி பிரியங்கா காந்தி பட்டேல், மாவட்ட செயலாளர்கள் ஜீவா நகர் மாரிமுத்து, திம்மை செந்தில்குமார் ,மகளிர் அணி அஞ்சு, கலை பிரிவு மாவட்ட தலைவர் ராகவேந்திரா,  கோட்டத் தலைவர் ராகுல் காந்தி சண்முகம், நிர்மல் குமார், வார்டு தலைவர்கள் மார்க்கெட் சம்சு, பாலக்கரை மாரியப்பன்,பொறியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சுதர்சன், நசீர், உறையூர் விஜி,  அதவத்தூர் வேலாயுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News