மத்திய பா. ஜ.அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மத்திய பா. ஜ.அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-03-16 11:05 GMT

திருச்சியில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் மத்திய பா.ஜ. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர்  அலுவலகம் முன்பு இன்று காலை காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பா.ஜ. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும்,பெட்ரோல் டீசல்,சமையல்  எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் ஏற்றத்தை கைவிடக்கோரியும்,  பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாவதை கண்டித்தும், அதானி நிறுனங்கள் குறித்து விவாதிக்க  பாராளுமன்ற கூட்டுக்குழு அமைப்பது குறித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமை தாங்கினார். தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம், ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேஷ் காந்தி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மோகனாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மலைக்கோட்டை முரளி உள்பட  திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிசார் அனைவரும் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது மத்திய அரசுக்கு எதிராக மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்  உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சோசியல் மீடியா மாநிலத் தலைவர் அபு தாகிர் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News