திருச்சியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் மறியல் போராட்டம்

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-06-17 16:36 GMT

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் மறியல் போராட்டம் நடத்தினர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்  சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை பொய் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காவல்துறையினர் புகுந்து தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் காங்கிரசார்  இன்று (17-06-22) திருச்சி மாரிஸ் தியேட்டர் அருகில் இருந்து ஊர்வலமாக நடந்து சென்று திருச்சி மெயின்கார்டு கேட் அருகில் தெப்பகுளம் தபால் தந்தி அலுவலகம் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் தலைமையில் மாபெரும் பஸ் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் மலைக்கோட்டை முரளி, பொதுச் செயலாளர்கள் ஜி. எம். ஜி. மகேந்திரன் எல்.ஐ.சி. ஜெயராமன். கீரகொல்லை சக்கரபாணி,  சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், மலைக்கோட்டை பகுதி வெங்கடேஷ், கலைப்பிரிவு ஸ்ரீ ராகவேந்திரா ராஜீவ் காந்தி, சண்முகம், பிரேம், பட்டேல், மாரிமுத்து, மகளிர் அணி அஞ்சு, ஜங்ஷன் பகுதி பிரியங்கா பட்டேல் தனசேகர், மன்சூர், வீரமணி, துபாய் மணி, சேகர், சம்சுதீன் வாழையூர் பூபாலன் மற்றும் பலர் மறியலில் ஈடுபட்டு அதன் பிறகு கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் சரவணன் தலைமையில் ஈடுபட்டனர்.இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சந்திரன் மகளிரணி ஜெகதீஸ்வரி சேவா தளம் அப்துல் குத்தூஸ், மலர் வெங்கடேஷ், ஜெயம் கோபி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News