திருச்சியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடிய காங்கிரசார்
திருச்சியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவை காங்கிரசார் சிறப்பாக கொண்டாடி உள்ளனர்.;
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் பிரதமர் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தியின் ௫௪வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் காங்கிரசால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த எந்த ஆண்டுகளிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கட்சியினர் மிக சிறப்பாக கொண்டாடி உள்ளனர்.
அந்த வகையில் இன்று(19-06-24)அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம் சரவணன் தலைமையில் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் சிறப்பு அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் கள்ளத்தெரு குமார் வெல்லமண்டி பாலசுப்ரமணியன், அண்ணா சிலை விக்டர் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் ,நாச்சி குறிச்சி அருண் பிரசாத் ,ஜீவா நகர் மாரிமுத்து ,பாலக்கரை மாரியப்பன், திம்மை செந்தில்குமார் ,வழக்கறிஞர் பிரிவு சுகன்யா சுப்ரமணி, கலை பிரிவு ராஜீவ் காந்தி டெல்லி ராஜ்குமார் எஸ் சி எஸ்டி பிரிவு வினோத் குமார் செய்தி தொடர்பாளர் நிர்மல் குமார் கோகுல் சண்முகம் முருகன் கிருஷ்ணமூர்த்தி ஜிம் விக்கி ஜிம் அர்னால்டு உறையூர் விஜி புவன் சிந்தை ஸ்ரீராம் வினோத் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.