இம்மானுவேல் சேகரனார் உருவ படத்திற்கு காங்கிரசார் மலர் மாலை அணிவிப்பு
திருச்சியில் இம்மானுவேல் சேகரனார் உருவ படத்திற்கு காங்கிரசார் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் மலைக்கோட்டை முரளி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், திம்மை செந்தில்குமார், பொறியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சுதர்சன், கலைப்பிரிவு ராஜீவ் காந்தி சண்முகம், வார்டு தலைவர் முருகன், ரியாஸ் மன்சூர், வீரமணி, புஷ்பராஜ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வீர தேவேந்திர மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனர் எஸ். எம். சேட்டு செய்திருந்தார்