வணிகர் சங்க பேரவையினர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையினர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் எஸ். பி. பாபு தலைமையில் நிர்வாகிகள் இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர்.அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் திருச்சி அரியமங்கலம் பகுதியில் கோழி கடை நடத்தி வரும் சங்க உறுப்பினர் ராஜா என்பவரை அதே பகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சபீக் அகமது என்பவர் மிரட்டி ரூ10 லட்சம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்காததால் பொய்யாக ராஜா உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்வதாக வீடியோ செட் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதனை நம்பி ராஜா கடையில் சோதனை நடத்தி உள்ளனர். இதனால் ராஜா மன உளைச்சலுக்கு ஆளானார். இப்படி தேவை இல்லாமல் மிரட்டிய சபீக் அகமது மீது நடவடிக்கை எடுப்பதோடு, ராஜாவிற்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.