பணம் மோசடி வழக்கு தொடர்பாக திருச்சி போலீஸ் ஐஜி அலுவலகத்தில் புகார்

பணம் மோசடி வழக்கு தொடர்பாக திருச்சி மத்திய மண்ல போலீஸ் ஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.;

Update: 2024-05-16 14:19 GMT

சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த மளிகை கடைக்காரரிடம் மிளகாய் வியாபாரம் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறி 53 லட்ச ரூபாய் மோசடி செய்த பெரம்பலூர் மாவட்டம் பாப்பங்கரையை சேர்ந்த சுரேஷ் என்ற நபர் மீது பெரம்பலூர் மாவட்ட குற்ற பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மளிகை கடைக்காரர் தாமோதரன் என்பவர் புகார் அளித்து இருந்தார்.

ஆனால் இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட மளிகை கடைக்காரர் தாமோதரன் நீதிமன்றத்தை அணுகி முறையிட்டார். இதுபற்றி விசாரணை நடத்திய நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய சொல்லி உத்தரவிட்ட பின்னரும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுரேஷ் உள்ளிட்ட ஏழு பேர் மீது பெயர் அளவில் பெரம்பலூர் மாவட்ட குற்றபிரிவு போலீசார் வழக்கு மட்டும் பதிவு செய்துவிட்டு இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் பெரம்பலூரில் சகஜமாக நடமாடி வரும் வேளையில் இதுவரையில் அவர்களை கைது செய்து பணத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனை கண்டித்து திருச்சி  மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் பாதிக்கப்பட்ட மளிகை கடைக்காரர் தாமோதரன் என்பவர் புகார் மனு கொடுத்தார். இந்த வழக்கில் மோசடியில் ஈடுபட்ட பாப்பாங்கரையை சேர்ந்த சுரேஷ் மீது ஏற்கனவே பெரம்பலூரில் 2000 ரூபாய் நோட்டை 500 ரூபாய் நோட்டாக மாற்றித் தருவதாக கூறி மதுரையை சேர்ந்த நபரிடம் 88 லட்சம் ரூபாய் மோசடி செய்தது, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரத்தை சேர்ந்த நபரை கடத்தி அவரை மிரட்டி அவரது வங்கிக் கணக்கில் இருந்த ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மோசடி செய்தது, சேலம் மாவட்டம் ஆத்தூரில் போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News