கல்லணை பொதுப்பணி துறை ஊழியர் மீது திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார்

கல்லணை பொதுப்பணி துறை ஊழியர் மீது திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-08-01 12:11 GMT

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுப்பதற்காக வந்த மீரா உசேன் குடும்பத்தினர்.

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது மீரா உசேன். இவர் தனது குடும்பத்துடன் கல்லணைக்கு சுற்றுலா சென்று உள்ளார். அங்குள்ள கார் பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அனைவரும் குளித்துவிட்டு திரும்ப தயாரான போது அவர்கள் சென்ற காரின் பின்புறம் இரு சக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.அந்த வாகன உரிமையாளரும் அந்த இடத்தில் அமர்ந்திருந்தார். உங்களுடைய வாகனத்தை சிறிது நகற்றினால் எங்களுடைய வாகனத்தை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மீரா உசேன் கூறி உள்ளார்.

அப்போது போதையில் இருந்த அந்த நபர் அருவருக்கத்தக்க தகாத வார்த்தைகளை பேசி உள்ளார்.பிறகு என் வாகனத்தின் மீது கை வைத்தால் நீங்கள் இங்கிருந்து போக முடியாது என்று மிரட்டி அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தாக்கி உள்ளார். கார் கண்ணாடியை உடைத்து நூர் முஹம்மது மற்றும் மீரா உசேன் ஆகியோரை அருகில் இருந்த ஒரு கூட்டம் சரமாரியாக தாக்கியது.

இதில் மீரா உசேனுக்கு கை முறிந்தது. பிறகு அங்குள்ள கல்லணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என  கூறி மீரா உசேன் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்து மனு கொடுத்தார். அதில் தன்னை தாக்கிய பொதுப்பணித்துறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி உள்ளார்.

Tags:    

Similar News