திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 2-வது நாளாக நடை பயணம்
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 2-வது நாளாக நடை பயணம் மேற்கொண்டனர்.;
திருச்சியில் இரண்டாவது நாளாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர்.
மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியை அகற்றக்கோரி திருச்சியில் இரண்டாவது நாளாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர்.
மத்திய பா.ஜ.க. அரசை அகற்றுவோம், நாட்டை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் நாடு தழுவிய நடை பயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தி வருகிறார்கள். திருச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நடைபயணத்தில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிலையில் திருச்சி மேற்கு பகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி குழுவின் சார்பில் இரண்டாவது நாள் நடைபயணம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் இப்ராகிம் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 8வது வார்டு பாண்டமங்கலத்தில் துவங்கி நடைபெற்றது. இதை ஏ.ஐ.டி.யூ.சி மாநில பொது செயலாளர் இராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
மேலும் நடைபயண இயக்கத்தில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பாஸ்கர்,சங்கையா கட்சியின்பகுதிச் செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி, துணைச் செயலாளர்க.முருகன், சந்திரபிரகாஷ், சரண் சிங், ஆனந்தன், காஜா, தர்மா, ஜெய்லானி, நாகராஜன், பார்வதி உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.
இதில் பங்கேற்றவர்கள் 8வது வார்டு மற்றும் 24 வது வார்டு தெருக்களின் வழியாக நடை பயணமாக சென்று மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.இந்த நடைபயணம் புத்தூர் அக்ரஹார பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் 24 ஆவது வார்டு செயலாளர் ப. துரைராஜ் நன்றி கூறினார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.