திருச்சி கோணக்கரை இடுகாட்டை சீரமைக்க கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

திருச்சி கோணக்கரை இடுகாட்டை சீரமைக்க கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-07-18 09:55 GMT

திருச்சி மேற்கு பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சுரேஷ் முத்துசாமி திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் அன்பழகனிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் திருச்சி மாநகராட்சியால் பராமரிக்கப்படும் உறையூர் கோணக்கரை எரிவாயு இடுகாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தகன அறையில் மேற்கூரைகள் புகை படிந்து உள்ளது.

இடுகாடு சூழலை மறைக்க மரங்கள் வளர்த்தும், சுற்றுச்சுவர் அமைத்தும் பராமரிக்கவேண்டும்.   கழிப்பறை குளியலறை சுத்தமாக  இல்லை. அவற்றை சீரமைக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News