திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆணையர்
திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை ஆணையர் முஜிபுர் ரகுமான் வெளியிட்டு உள்ளார்.;
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தேர்தலுக்கான மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி மைய அலுவலகத்தில், ஆணையர் முஜிபுர் ரகுமான் வெளியிட்டு உள்ளார்.
திருச்சி மாநகராட்சி வார்டு எண்.1 முதல்65 வரை மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளில் வாக்காளர்கள் மொத்தம் 7,74,415 உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3,75,397, பெண் வாக்காளர்கள் 3,98,900 திருநங்கைகள்118 உள்ளனர்.
இந்த வாக்காளர் பட்டியல் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்சியில் உதவி ஆணையர்கள் தயாநிதி , சண்முகம், அக்பர்அலி, கமலகண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.