திருச்சியில் விடுதியில் தங்கி படித்த கல்லூரி மாணவி திடீர் மாயம்

திருச்சியில் விடுதியில் தங்கி படித்த கல்லூரி மாணவி திடீர் என மாயமானார்.

Update: 2021-12-06 12:42 GMT

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் மாணவிகளுக்கான விடுதியும் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விடுதியில் தங்கி படிக்கும் பி.எஸ்.சி. கணினி அறிவியல் முதலாம் ஆண்டு மாணவி முல்லை ஆசிகா நாச்சியார் (வயது 19) என்பவர் தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் விடுதிக்குத் திரும்பவில்லை. பாட்டி வீட்டுக்கும் செல்ல வில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை .இது குறித்து அவரது தாய் பாத்திமா நாச்சியார் கே.கே. நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News