திருச்சியில் காதலில் சிக்கிய கல்லூரி மாணவி திடீர் மாயம்
திருச்சியில் காதலில் சிக்கிய கல்லூரி மாணவி மாயமானார். போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.;
திருச்சி சங்கிலியாண்டபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மகள் லீலாவினோதினி (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்., படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்ற அவர் வீடு திரும்ப வில்லை. அவரது பெற்றோரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்ததில் அவர் கிடைக்க வில்லை.
இது குறித்து பாலக்கரை போலீசாரிடம் பார்த்திபன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் சிவகுமார் என்ற வாலிபருக்கும், லீலா வினோதினிக்கும் காதல் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. எனவே வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் தங்கவேல் வினோதினியை தேடி வருகிறார்.