திருச்சி அரசு மருத்துவமனையில் கலெக்டர் பிரதீப்குமார் இன்று ஆய்வு
திருச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் இன்று ஆய்வு செய்தார்.;
திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் இன்று ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக மா. பிரதீப்குமார் இன்று பொறுப்பேற்றார். பதவி ஏற்றதும் அவர் திருச்சி அண்ணல்காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவமனை டீன் நேரு மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.