நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா அதவத்தூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கு உள்ளது. இங்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அரிசி மூட்டைகளின் எண்ணிக்கை, ஈரப்பதம், நிறம், தரம் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி கிடங்கை சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கினார். நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சுமித்ரா, தரக்கட்டுப்பாடு மேலாளர் வனிதாமணி ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.