தேசிய நெடுஞ்சாலை திருச்சி கோட்டம் சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணி
தேசிய நெடுஞ்சாலை திருச்சி கோட்டம் சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேசிய நெடுஞ்சாலை துறை திருச்சி கோட்டம் சார்பில் இன்று தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரத பிரதமர் மோடி அக்டோபர் 1ம் தேதி நாடு முழுவதும் ஸ்வச்சதா ஹை சேவா என்ற திட்டத்தின் கீழ் அனைவரும் ஒரு மணி நேரம் தூய்மை பணிகள் மேற்கொண்டு தூய்மை பணியே சேவை எனும் பணியை செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.
இந்த அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் இன்று தூய்மையே சேவை பணியில் அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலை திருச்சி கோட்டத்தின் சார்பில் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் குண்டூர் எம்ஐஇடி பொறியியல் கல்லூரி அருகில் ஸ்வச்சதா ஹை சேவா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை திருச்சி கோட்ட பொறியாளர் சேதுபதி தலைமை தாங்கினார்.
உதவி கோட்ட பொறியாளர்கள் ரவிக்குமார், சத்திய மூர்த்தி, எழிலரசி, உதவி பொறியாளர்கள் லோகநாயகி, திலகவதி, கோகுல வர்த்தினி, உள்ளிட்டவர்கள் மற்றும் குண்டூர் பஞ்சாயத்து ஊழியர்கள், நாட்டு நலப்பணிதிட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை நடுவே சென்டர் மீடியன் மற்றும் சாலை ஓரங்களில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றினார்கள்.
பின்னர் தூய்மையே சேவை பணியின் முக்கியத்துவம் தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு வழங்கினார்கள்.