திருச்சியில் சி.ஐ.டி.யு. தனியார் பேருந்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-12-22 11:16 GMT

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் சி.ஐ.டி.யு. தனியார் பஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் களுக்கு கழிப்பறை வசதியுடன் உடை மாற்றும் அறை கட்டித்தர வேண்டும். இரண்டு முறை போராட்ட அறிவிப்பின் போது நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று சத்திரம் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சாலை போக்குவரத்து மாவட்ட செயலாளர் சந்திரன், மாவட்ட தலைவர் வீரமுத்து, மாவட்ட பொருளாளர் சுரேஷ் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கண்ணன் நன்றி.

Tags:    

Similar News