முதல்வர் வருகை தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை

முதல்வர் வருகிற 30ம் தேதி வருகை தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.;

Update: 2021-12-22 14:04 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் முதல் அமைச்சர் வருகை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 30ந்தேதி திருச்சிக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைத்தல்  உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறார்.

முதல்வர் வருகையையொட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார் உள்பட அனைத்து துறை தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News