கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல் அமைச்சரின் நிவாரண உதவி
கொரோனாவால் திருச்சி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல் அமைச்சரின் நிவாரண உதவியை கலெக்டர் வழங்கினார்.
கொரோனா பெருந்தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்தவர்களின் குழந்தைகளுக்கு தமிழக அரசு முதல் அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கி வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த 6 குழந்தைகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் முதல் அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ3 லட்சம் வழங்கும் நிகழ்வு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இந்த நிவாரண நிதிக்கான காசோலைகளை உரியவர்களிடம் வழங்கினார்.