பணியின் போது மரணமடைந்த 9 காவல் ஆளினர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதி

திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரிந்து பணியின் போது மரணமடைந்த 9 காவல் ஆளினர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

Update: 2022-02-12 17:00 GMT

நிவாரண நிதியை பெற்றுக் கொண்ட குடும்பங்கள். 

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், காவலர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யவும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். மேலும், திருச்சி மாநகரத்தில் காவல்துறையில் பணிபுரிந்து, பணியின்போது மரணமடைந்த 9 காவல் ஆளினர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3,00,000/ வழங்கப்படுகிறது.

அவ்வாறு நேற்று (11.02.22) திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிவாரணநிதி வழங்கும் நிகழ்வில் பாலக்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கான நிதியை அவரது மனைவி அனிதா அவர்களிடமும், AVS Unit -ல் பணிபுரிந்த ஆரோக்கியசாமி என்பவருக்கான நிதியை அவரது மனைவி இருதையமேரியிடமும், கே.கே.நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த வின்சென்ட் என்பவருக்கான நிதியை அவரது மனைவி ஆடம்ஸ் என்பவரிடமும், அரியமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சன்னாசி என்பவருக்கான நிதியை அவரது மனைவி சுப்புலட்சுமி என்பவரிடமும், மாநகர ஆயுதப்படையில் பணிபுரிந்த குணசேகரன் என்பவருக்கான நிதியை அவரது மனைவி துர்கா என்பவரிடமும், மாநகர ஆயுதப்படையில் பணிபுரிந்த மகேஸ்வரி என்பவருக்கான நிதியை அவரது கணவர் மயில்வாகனன் என்பவரிடமும், BDDS பிரிவில் பணிபுரிந்த பாண்டி என்பவருக்கான நிதியை அவரது மனைவி சிவசங்கரியிடமும், உறையூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பாலசுப்பரமணியன் என்பவருக்கான நிதியை அவரது மனைவி வெண்ணிலா என்பவரிடமும், அரியமங்லம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஜாபிர்கான் என்பவருக்கான நிதியை அவரது மனைவி தகிராபேகம் என்பவரிடமும் ஆக மொத்தம் 27 லட்சம் நிதியை கமிஷனர் கார்த்திகேயன் வழங்கி ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News