திருச்சியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டம் துவக்கி வைப்பு
திருச்சியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.;
மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதுபற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று மாணவ மாணவிகள்பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது.திருச்சி பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் உப்புசத்தியாகிரக தியாகிகள் நினைவு ஸ்தூபி அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு ஓட்டமானது ரெயில்வே ஜங்ஷன், ரெயில்வே மேம்பாலம், மன்னார்புரம் வழியாக அண்ணாவிளையாட்டுஅரங்கத்தை அடைந்தது. இதில் மாணவர்களுடன் சேர்ந்து மாவட்ட விளையாட்டு அதிகாரி ஞானசுகந்தி, வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், தாசில்தார் சேக்முஜிப், காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் ஆகியோரும் பங்கேற்றனர்.