'இன்னும் 10 நாளில் மாற்றம் வரும்'- உதய நிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

‘இன்னும் 10 நாளில் மாற்றம் வரும்’- என உதய நிதி ஸ்டாலின் திருச்சி பிரச்சார கூட்டத்தில் பரபரப்பாக பேசினார்.

Update: 2022-02-09 16:19 GMT

திருச்சியில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து உதய நிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

தமிழகத்தில் வருகிற 19ம்   தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்று திருச்சிமாவட்டம் முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், சமயபுரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்து விட்டு திருச்சி உறையூர் குறத்தெரு, மரக்கடை ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்  கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது தான் தலைவர் முதல் அமைச்சராக பதவி ஏற்றார். இந்த அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. தலைவர் முதல்வராக பொறுப்பேற்ற இந்த எட்டு மாத காலத்தில் சுமார் 9 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

திருச்சி எப்போதுமே தி.மு.க.வின் கோட்டை தான். அது இந்த தேர்தலிலும்  தொடரவேண்டும். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் உள்ளன. 10 நாட்களில் மாற்றம் வரும். தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்கவேண்டும். ஒவ்வொரு தொண்டனும் ஐந்து வாக்குகளுக்கு பொறுப்பேற்கவேண்டும் என்றார்.

இந்த கூட்டங்களில் திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை உதய நிதிஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

Tags:    

Similar News