சந்திரயான் விண்கலம் 3 நிலவில் இறங்கியது குறித்த சிறப்பு அஞ்சல் முத்திரை
சந்திரயான் விண்கலம் 3 நிலவில் இறங்கியது குறித்த சிறப்பு அஞ்சல் முத்திரை திருச்சியில் வெளியிடப்பட்டது.
இஸ்ரோவின் சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கும் சிறப்பு முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் இஸ்ரோவின் சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கும் சிறப்பு முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி விஜய் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர் முன்னிலை வகித்தார். அஞ்சல் தலை சேகரிப்பாளர் காசிநாத் சந்திராயன்-3 சிறப்பு அஞ்சல் முத்திரை குறித்து பேசுகையில், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் சந்திரயான் - 3 விண்கலம் 2023 ஜூலை மாதம் 14-ஆம் தேதி ஏவப்பட்டது. சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
அதன்பின்னர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவை தொடர்ந்து ஆய்வு செய்தது. நிலவில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது. இந்திய அஞ்சல் துறை , பெங்களூர் வட்டம் சந்திரயான் - 3 விண்கல வெற்றியை கொண்டாடும் வகையில் ஒரு சிறப்பு அஞ்சல் முத்திரையை வெளியிட்டுள்ளது. சந்திராயன் -3 "ஒவ்வொரு இந்தியனுக்கும் மகத்தான பெருமை மற்றும் சிலிர்ப்பின் தருணம், எனவே இந்த பணியின் வெற்றிக்காக தங்களை அர்ப்பணித்த ஒவ்வொரு சிறந்த விஞ்ஞானிகளுக்கும் அஞ்சல் துறையினர் மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் முத்திரையை வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளமாக ஆவணப்படுத்த சிறப்பு அஞ்சல் முத்திரையினை வெளியிட்டுள்ளனர்.
தபால்தலை ஆர்வலர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, சிறப்பு அஞ்சல் முத்திரையில் மூவர்ணக் கொடி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கும் சிறப்பு முத்திரை படம் மற்றும் வெளியிடப்பட்ட இடத்தின் தேதி மற்றும் பின் குறியீடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
நிலவின் தென் துருவப் பகுதியில் தடம் பதித்த முதல் நாடு இந்தியா என்ற வகையில் தேசத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றார். முன்னதாக திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்க நிறைவாக ஜலால் நன்றி கூறினார்.