திருச்சியில் தேசிய வாக்காளர் தினத்தில் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

திருச்சி மாவ்ட்டத்தில் சிறப்பாக பணியாற்றி அதிகாரிகளுக்கு தேசிய வாக்காளர் தினத்தில் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-01-25 16:15 GMT

பாராட்டு சான்றிதழ் பெற்ற அதிகாரிகளுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உள்ளார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.இதனையொட்டி நடந்த நிகழ்ச்சியில் வாக்காளர் சேர்ப்பின்போது சிறப்பாக பணியாற்றிய வாக்குப்பதிவு நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் சிவராசு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகளையும் வழங்கினார். 

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News