திருச்சியில் அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-11-14 16:57 GMT

திருச்சியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வலியுறுத்தியும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேவா சங்கம் பெண்கள் பள்ளி எதிரில் உள்ள ஜவர்லால் நேரு சிலை முன்பு இருந்து இரு சக்கர விழிப்புணர்வு பேரணி புறப்பட்டு ஸ்ரீரங்கம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இருசக்கர பேரணிக்கு போலீசார் அனுமதி தர மறுத்ததை அடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார்.

முன்னதாக மறைந்த பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி பி.எஸ்.என்.எல். இ.யூ., அஸ்லாம் பாஷா, ஏ. ஐ. ஐ. இ.ஏ., ரமேஷ்குமார், பி.இ. எப்.ஐ., மணிவண்ணன், சந்தானம், என்.எல்.பி. இ., கிருஷ்ணமூர்த்தி, டி. ஆர். இ. யூ., மகேந்திரன் மற்றும் லிகாய், டி.என்.ஜி. இ.ஏ, போஸ்டல் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News