திருச்சியில் கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

திருச்சியில், கல்லறைத்திருநாளையொட்டி மறைந்தவர்களுக்கு கிறிஸ்தவர்கள் இன்று பிரார்த்தனை செய்தனர்.

Update: 2021-11-02 09:45 GMT

திருச்சியில் கல்லறைத்திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் மறைந்தவர்களின் கல்லறையில் பிரார்த்தனை செய்தனர்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் நவம்பர் 2-ஆம் தேதியை இறந்தவர்களின் நினைவு நாளாக கடைபிடிக்கிறார்கள். இந்நாளில், திருச்சியில் கிறிஸ்தவர்கள் தங்களின் குடும்பங்களில் மரித்த மூதாதையர்கள், பெற்றோர்கள், உடன் பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரது கல்லறைகளையும் முன்னதாகவே சுத்தம் செய்து வண்ணம் பூசி கல்லறை திருநாளன்று குடும்பத்துடன் வந்து அவற்றை மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மனம் உருகி வேண்டி செல்கின்றனர்.

மேலும் கல்லறை தோட்டங்களுக்கு உட்பட்ட தேவாலய பாதிரியார்கள் இறந்தவர்களுடைய ஆன்மா இளைப்பாற்றிக்காக சிறப்புத்திருப்பலியும் நடைபெற்றது. கல்லறைகளின் மீது புனித நீரும் தெளிக்கப்பட்டது.

Tags:    

Similar News