நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறிப்பு
திருச்சியில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருச்சி நவலூர் கொட்டப்பட்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் பதீர்த்தலோன் (வயது 24). இவர் திருச்சி தில்லை நகர், 10-வது குறுக்கு ரோட்டில் உள்ள மொபைல் பேஸ்கட் என்ற கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இவர் நேற்று இரவு செல்போனுக்கு உதிரிபாகங்கள் வாங்க திருச்சி சிங்காரத்தோப்பு அருகே மதுரை ரோட்டில் உள்ள சூர்யா காம்ப்ளக்ஸ்க்கு, கோட்டை ரயில் நிலையம் வழியாக நடந்து வந்த கொண்டிருந்தார். அப்போது இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து வலது கையில் கத்தியால் கிழித்து விட்டு அவரிடமிருந்த விவோ எஸ்.1 என்ற மாடல் செல் போனை பறித்து சென்று விட்டனர்.
இது குறித்து பதீர்த்தலோன் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.